குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி மிரட்டல்

குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி மிரட்டல் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Update: 2020-02-07 21:54 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வணிகர் வீதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காஞ்சீபுரம் வணிகர் வீதியில் உள்ள 200 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறினார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து பெரிய காஞ்சீபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர் போலீசாருடன் அந்த இடத்திற்கு விரைந்து சென்றார்.

அவரை கீழே இறங்குமாறு போலீசார் கூறினர். அதற்கு அவர் குடியுரிமை சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று மது போதையில் கூறிகொண்டே இருந்தார். ½ மணி நேரத்துக்கு பின்னர் கீழே இறங்கிய அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

மேலும் செய்திகள்