காதலியிடம் வீடியோ கால் பேசிக்கொண்டே வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

காதலியிடம் செல்போனில் வீடியோ கால் பேசிக்கொண்டே வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-02-06 22:15 GMT
சென்னை,

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் ஜோனந்தன் பாமோய் (வயது 25). இவர் சென்னை அண்ணாநகர் கிழக்கு ஆர்.வி. நகரில் நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி, அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வந்தார். இவரும், மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு ஜோனந்தன், தான் வேலை செய்யும் ஓட்டல் மேலாளரிடம் வீட்டிற்கு செல்ல வேண்டும் என கூறிவிட்டு, அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜோனந்தன், தனிமையில் அவரது காதலியுடன் செல்போனில் வீடியோ கால் பேசியுள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் ஜோனந்தன் தனது காதலியுடன் வீடியோ கால் பேசிக்கொண்டிருக்கும் போதே, அவரது அறையில் உள்ள மின்விசிறியில் போர்வையால் தூக்குப்போட்டு கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வீட்டு உரிமையாளர் மற்றும் ஓட்டல் மேலாளரும் ஜோனந்தனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜோனந்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து டி.பி.சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோனந்தன் தற்கொலை செய்து கொண்டதுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்