அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
காவேரிப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
பனப்பாக்கம்,
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திவ்யதர்ஷினி திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்களிடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றியும், குறைகளையும் கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து காவேரிப்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு செய்தார். அப்போது ஒன்றியத்தில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் ஊராட்சி ஒன்றிய புதிய கட்டிடத்துக்கு இடத்தையும் பார்வையிட்டார்.
ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ரவி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.