பழுது பார்க்கும் நிலையத்தில் நிறுத்தி வைத்து இருந்த 5 பஸ்கள் தீயில் எரிந்து சேதம்

கேளம்பாக்கம் அருகே பழுது பார்க்கும் நிலையத்தில் நிறுத்தி வைத்து இருந்த 5 பஸ்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.

Update: 2020-02-05 23:00 GMT
திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த வேங்கடமங்கலம் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம். பஸ் பழுதுபார்க்கும் நிலையத்தில் ஊழியர்கள் நேற்று வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது தீப்பொறியில் அங்கு நிறுத்தி வைத்திருந்த பஸ் திடீரென தீப்பிடித்தது. இது குறித்து அங்கு இருந்த ஊழியர்கள் மறைமலைநகர் மற்றும் சிறுசேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

5 பஸ்கள் சேதம்

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இருப்பினும் தீ வேகமாக பரவி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 பஸ்கள் முழுமையாக சேதம் அடைந்தது. இதனால் அந்த பகுதி முழுக்க புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இது குறித்து தாழம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்