வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட 68 ஆயிரத்து 983 விண்ணப்பங்கள் மீது விசாரணை: சிறப்பு பார்வையாளர் உத்தரவு
வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட 68 ஆயிரத்து 983 விண்ணப்பங்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2020 தொடர்பாக வாக்காளர் பதிவு அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளரான கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் கருணாகரன் தலைமை தாங்கினார். கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சிறப்பு பார்வையாளர் பேசியதாவது:-
திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பு முகாம்கள் மற்றும் இணைய வழியில் பெறப்பட்ட பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக 68 ஆயிரத்து 983 விண்ணப்பங்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி முடிவு செய்ய வேண்டும். தள்ளுபடி செய்யப்படும் விண்ணப்பங்களுக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். அனைத்து விண்ணப்பங்களும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேற்பார்வையாளர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் தங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாக சென்று மேலாய்வு செய்ய வேண்டும். பிழையில்லாத வாக்காளர் பட்டியலை தயார் செய்ய அனைத்து அதிகாரிகளும் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அவர் பேசினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், ஆர்.டி.ஓ.க்கள் கவிதா(திருப்பூர்), ரவிக்குமார்(உடுமலை), திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சாகுல்அமீது, தேர்தல் தாசில்தார் முருகதாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவினாசி ரோடு, அனுப்பர்பாளையம் புதூர் பாரதிநகர், காந்திநகர், பத்மாவதிபுரம், ஏ.வி.பி. லே-அவுட், அங்கேரிப்பாளையம் காதர் லே அவுட் பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் கருணாகரன் சென்று கள விசாரணை மேற்கொண்டார். பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்களை அவர் ஆய்வு செய்தார்.