திருவண்ணாமலை ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் கூட்டம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) டாக்டர் ஜி.அரவிந்த் தலைமை தாங்கினார்.

Update: 2020-02-04 21:45 GMT
திருவண்ணாமலை, 

ஊராட்சி செயலாளர்கள் கூட்டத்திற்கு ஆணையாளர் தி.அண்ணாதுரை முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் வரவேற்றார்.  கூட்டத்தில் ஊராட்சி கணக்குகளை சாப்ட்வேரில் படிவம் 30–ன் மூலம் விரைவாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். 

ஊராட்சியின் வரவு செலவுகளை அரசு புதிதாக நடைமுறைப்படுத்தியுள்ள பி.எப்.எம்.எஸ். மூலம் பணபரிவர்த்தனை செய்யும் பணிகளை ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சியில் உள்ள கணினி மூலம் செய்ய வேண்டும். விரைவாக அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் ஊராட்சி வரவு செலவு பராமரிப்பு பதிவேடுகளை வழங்க வேண்டும் என உதவி இயக்குனர் அரவிந்த் கூறினார்.

கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 69 ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்