அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் போக்குவரத்து பணி மனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-02-04 21:30 GMT
கன்னியாகுமரி, 

ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க பணிமனை செயலாளர் பால்தாஸ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. செயலாளர் பெருமாள், மாநில துணைத்தலைவர் ஷெர்கான் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக முடிக்க கோரியும், ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு பண பலன்களை உடனடியாக வழங்க கேட்டும், புதிய ஊழியர்களை உடனடியாக நியமனம் செய்ய கோரியும், பஞ்சப்படி நிலுவை தொகை மற்றும் சீருடை போன்றவைகளை உடனடியாக வழங்ககோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இதில் தொ.மு.ச. மற்றும் சி.ஐ.டி.யூ. நிர்வாகிகளான தங்கப்பன், ரபீக், செல்லசாமி, தர்மராஜ், ரவிசங்கர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்