பாளையங்கோட்டையில், ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை

பாளையங்கோட்டையில் சாலை ஆக்கிரமிப்பு கடைகளை, நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.;

Update: 2020-02-04 05:15 GMT
நெல்லை, 

பாளையங்கோட்டை மார்க்கெட்டில் இருந்து மணிக்கூண்டு, கக்கன்நகர் வழியாக சீவலப்பேரி செல்லும் சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை முயற்சி செய்து வருகிறது.

இதற்காக சாலையின் ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்தநிலையில் பாளையங்கோட்டை மார்கெட்டில் இருந்து கக்கன்நகர் வரை ரோட்டின் இருபுறங்களிலும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகளை உடனே அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடைகாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அப்படி இருந்தும் அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.

இந்தநிலையில் நேற்று காலையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி தலைமையில் ஊழியர்கள், பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினார்கள்.

இதற்கு சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதேபோல் நெல்லை டவுன், முருகன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்