திருக்கனூர் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியல்
திருக்கனூர் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.உடனேஅதிகாரிகள் ஆய்வு செய்து குடிநீர் இணைப்பில்விவசாயத்துக்கு பயன்படுத்திய குழாய்களைஅதிரடியாகதுண்டித்தனர்.
திருக்கனூர்,
திருக்கனூர் அருகே செட்டிப்பட்டு பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் மாரியம்மன் கோவில் வீதி உள்பட சில பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.இதுதொடர்பாக கொம்யூன் பஞ்சாயத்துக்கு புகார்தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் தலைமையில் உதவிபொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் சாந்தன், அலுவலக உதவி மேலாளர் அன்பு மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலர்கள் செட்டிப்பட்டு கிராமத்துக்கு சென்று குடிநீர் பிரச்சினைக்கு காரணம் என்ன? என தண்ணீர் தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு வந்த கிராம மக்கள், குடிநீர் இணைப்பு பெற்ற சிலர், அவற்றை விவசாயத்திற்கு பயன்படுத்தி வருவதாக புகார் கூறினர். உடனே அதிகாரிகள் விவசாய நிலங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது குடிநீர் இணைப்புகளை முறைகேடாக விவசாயத்துக்கு பயன்படுத்தியதும், மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதும் தெரியவந்தது.
இதையடுத்து விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்ட 6 குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் அதிரடியாக துண்டித்தனர்.
மேலும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், விவசாயி சேதுராமன் என்பவருடைய நிலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகம் செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்தநிலையில் செட்டிப்பட்டு கிராம மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி நேற்று திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் பிரச்சினைக்கு அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.