நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

திருவேற்காட்டில், நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2020-02-03 21:17 GMT
பூந்தமல்லி,

திருவேற்காடு மேல் அயனம்பாக்கம், ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவருடைய மகள் சசிகலா(வயது 18). இவர், வானகரத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த சசிகலா, தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். நீண்டநேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

அங்கு தங்கள் மகள் சசிகலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருவேற்காடு போலீசார், தூக்கில் தொங்கிய மாணவி சசிகலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில் தீராத வயிற்று வலி காரணமாக மாணவி சசிகலா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். எனினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்