தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஊட்டியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.;
ஊட்டி,
இந்திய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு சட்டம் ஆகியவற்றை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் நேற்று கையெழுத்து இயக்கம் நடந்தது. தி.மு.க. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கையெழுத்து இயக்கத்தை பா.மு.முபாரக் தொடங்கி வைத்து கூறியதாவது:- மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு சட்டம் ஆகியவற்றால் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களிலிருந்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது. ஆனால் அங்கிருந்து இஸ்லாமியர் ஒருவர் வந்தால் குடியுரிமை கிடையாது.
ஈழத்தமிழர்கள்
குடியுரிமை திருத்த சட்டம் என்பது இஸ்லாமிய மக்களுக்கு எதிரானதாக பார்க்கக்கூடாது. அது ஒட்டுமொத்தமாக தேசத்தில் உள்ள ஏழை, எளிய, தலித் மற்றும் பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானது என்ற அடிப்படையில்தான் இந்த சட்டத்தை எதிர்க்கின்றோம்.
தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாமல் பல ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்கின்றனர். அவர்களுக்கு குடியுரிமை கிடைக்குமா என்றால் அதுவும் இல்லை. இந்தியாவை மதரீதியாக துண்டாட நினைக்கும் சக்திகளை அடையாளம் காணவேண்டும் என்பதை வலியுறுத்தி தான் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.