ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் குப்பை மேட்டில் குவிந்து கிடந்த சாக்லெட்டுகளால் பரபரப்பு
சாக்லெட் மொத்த வியாபாரிகள் காலாவதியான இந்த சாக்லெட்டுகளை இங்கு கொட்டியிருக்கலாம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்,
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழமையான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், வியாபாரிகளும் அடிக்கடி குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதி குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் இந்த குப்பைமேட்டில் நேற்று முன்தினம் சாக்லெட்கள் குவிந்து கிடந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இவை அனைத்தும் காலாவதியான சாக்லெட்டுகள் என்பது தெரியவந்தது.
சாக்லெட் மொத்த வியாபாரிகள் காலாவதியான இந்த சாக்லெட்டுகளை இங்கு கொட்டியிருக்கலாம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இதே போன்ற காலாவதியான சாக்லெட்டுகள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா? என்று சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் ஸ்ரீபெரும்புதூர் பஜாரில் உள்ள கடைகளில் சோதனை செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.