குடியாத்தம் அருகே காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின
குடியாத்தம் அருகே காட்டு யானைகள் மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின.
குடியாத்தம்,
குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மோர்தானா, சைனகுண்டா, கொட்டமிட்டா, மோடிகுப்பம், தனகொண்டபல்லி, கல்லப்பாடி அருகே அனுப்பு, டி.பி.பாளையம், கொத்தூர் உள்ளிட்ட பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ளது. இந்த பகுதியில் உள்ள விளைநிலங்களில் அடிக்கடி காட்டு யானைகள் மற்றும் மான்கள் வந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் இப்பகுதியை ஒட்டியபடி ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் கவுண்டன்ய யானைகள் சரணாலயம் உள்ளது. அங்கிருந்தும் யானைகள் தமிழக எல்லைக்குள் வந்து கிராமப்புற பகுதியில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்துகிறது.
கடந்த 2 மாதங்களாக காட்டு யானைகள் தினமும் வாழை, மா, பப்பாளி, தக்காளி மற்றும் நெற்பயிர்களை நாசம் செய்து வருகின்றன. வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து விரட்டி வருகின்றனர். இருப்பினும் யானைகள் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.
காட்டுக்குள் விரட்டினர்
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக 30-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் 3 குழுக்களாக பிரிந்து பரதராமியை அடுத்த டி.பி.பாளையம் கொத்தூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி, பாண்டுரங்கன், லோகநாதன், மோகன், சபாபதி ஆகியோரது நிலங்களில் இரவில் கூட்டமாக வந்து நெற்பயிர், மாந்தோப்பிற்குள் புகுந்து பெருத்த சேதங்களை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நள்ளிரவில் மாவட்ட வனஅலுவலர் பார்கவ்தேஜா, உதவி வனபாதுகாவலர் முரளிதரன், வனச்சரக அலுவலர் (பொறுப்பு) பாலாஜி, வனவர்கள் முருகன், ரவி உள்ளிட்ட வனத்துறையினர் உள்ளூரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்தும், மேளங்கள் அடித்தும் காட்டிற்குள் விரட்டினர்.
தமிழக எல்லையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திரமாநில வனப்பகுதியில் தஞ்சமடையும் யானைகள் இரவு 7 மணி அளவிலேயே விளைநிலங்களுக்குள் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
வாழைத்தோப்பு
இதேபோல் குடியாத்தம் அருகே மோடிகுப்பம் காலனியை ஒட்டியபடி உள்ள சீனிவாசன் என்பவரது வாழைத்தோப்பிற்குள் புகுந்த மற்றொரு யானைகள் கூட்டம் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியது. அதே பகுதியில் உள்ள வசந்தா என்பவரது நிலத்தில் கொள்ளு பயிர்களை நாசம் செய்தது.
மற்றொரு யானைகள் கூட்டம் மோடிகுப்பம் சிலமத்தை கணவாய் பகுதியில் ராஜாராம் என்பவரது நிலத்தில் 43 மாமரங்களையும், போர்வெல் பைப்லைனையும் சேதப்படுத்தியது. இதே யானை கூட்டம் கீழ்கொல்லப்பல்லியை சேர்ந்த துரைசாமி என்பவரது வாழை தோட்டத்திற்குள் புகுந்து 50 வாழை மரங்களையும், 3 மாமரங்களையும் சேதப்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனவர் பிரகாசம் தலைமையிலான 10 பேர் கொண்ட வனக்குழுவினரும், பேரணாம்பட்டு வனவர் ஹரி தலைமையிலான 10 பேர் கொண்ட வனக்குழுவினரும், பொதுமக்கள் உதவியுடன் யானைகளை காட்டிற்குள் விரட்டினர்.
கடந்த 2 மாதங்களில் மட்டும் விவசாயிகளின் பல லட்சம் மதிப்பிலான பயிர்களை யானைகள் கூட்டம் நாசம் செய்துள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த சோகத்தில் உள்ளனர்.
2 மாநில வனத்துறையினரும்
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் இருந்து விரட்டப்படும் யானைகள் ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு செல்கிறது. அங்கிருந்து ஆந்திர வனத்துறையினர் யானைகளை விரட்டுவதால் யானைகள் கூட்டம் மீண்டும் தமிழக எல்லைப்பகுதிக்கு வந்து விடுகிறது. இதனையடுத்து 2 மாநில வனத்துறையினர் இணைந்து யானைகளை அடர்ந்த காட்டிற்குள் விரட்ட வேலூர் மாவட்ட வனஅலுவலர் பார்கவ்தேஜா, சித்தூர் மாவட்ட வனஅலுவலர் சுனில்ரெட்டியுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஓரிரு நாட்களில் 2 மாநில வனத்துறையினரும் இணைந்து யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதியில் பல கிலோமீட்டர் தொலைவிற்கு விரட்டப்படும் என்று தெரிவித்தார்.