ரூ.25 லட்சம் இழப்பீடு கேட்டு விமான நிறுவனத்துக்கு நகைச்சுவை கலைஞா் நோட்டீஸ்

ரூ.25 லட்சம் இழப்பீடு கேட்டு இண்டிகோ விமான நிறுவனத்துக்கு நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.;

Update: 2020-02-01 23:36 GMT
மும்பை, 

மும்பையை சேர்ந்தவர் பிரபல நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை - லக்னோ விமானத்தில் பயணம் செய்த போது அதில் இருந்த பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து இண்டிகோ விமான நிறுவனம் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ராவுக்கு 6 மாதம் விமானத்தில் பறக்க தடை விதித்தது. இதை தொடர்ந்து ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், கோ ஏர் ஆகிய நிறுவனங்களும் தங்களது விமானத்தில் பயணிக்க குணால் கம்ராவுக்கு தடை விதித்தது.

இந்தநிலையில் குணால் கம்ரா, இண்டிகோ நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீசில் அவருக்கு மனரீதியாக அழுத்தம் கொடுத்ததற்காகவும், தடை விதித்து அவர் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் செய்ததற்காகவும் ரூ.25 லட்சம் இழப்பீடு கேட்டு உள்ளார்.

மேலும் சட்டவிரோதமாக தனக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் நோட்டீசில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா கூறியுள்ளாா்.

மேலும் செய்திகள்