அந்தியூர் அருகே தோட்டத்தில் கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது
அந்தியூர் அருகே அத்தாணி பகுதியில் தோட்டத்தில் கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது
அந்தியூர்
அந்தியூர் அருகே அத்தாணி பகுதியில் உள்ள குயவன் தோட்டத்தில் வசித்து வருபவர் குமார். விவசாயி. இவரது வீட்டையொட்டி தோட்டம் உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குமார் தனது தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது தோட்டத்தில் இருந்த வலையில் பாம்பு சிக்கி கிடந்தது. இதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இதுபற்றி அந்தியூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனச்சரகர் உத்திரசாமி மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வலையில் சிக்கியிருந்தது கொடிய விஷத்தன்மையுடைய 4 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு என்பது தெரியவந்தது. பின்னர் அந்த பாம்பை லாவகமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.