பாசூர்-சோழசிராமணி இடையே தற்காலிக மண்பாதை அமைப்பு

பாசூர் பாலம் அருகே தற்காலிக மண்பாைத அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-02-01 23:00 GMT
ஊஞ்சலூர்,

ஊஞ்சலூர் அருகே உள்ள பாசூர்- நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி இடையே காவிரி ஆற்றில் பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் அருகே உள்ள சாலை ஏற்கனவே இடிந்து சரிந்து பள்ளத்தில் விழுந்துவிட்டது. இதனால் பாசூர்-சோழசிராமணி இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் கனரக வாகனங்கள் மட்டுமின்றி பள்ளிக்கூட வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாசூர் பாலம் அருகே தற்காலிக மண்பாைத அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாதையில் கனரக வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் தற்போது சென்று வருகின்றன.

மேலும் செய்திகள்