மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாம் நிறைவு: மணக்குள விநாயகர் கோவில் யானை புதுச்சேரி வந்தது

மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில் பங்கேற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை புதுச்சேரி வந்தது.

Update: 2020-02-01 22:55 GMT
புதுச்சேரி,

தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியும் ஆண்டுதோறும் கலந்துகொண்டு வருகிறது.

இந்த ஆண்டு 48 நாட்கள் நடந்த முகாம் நேற்று முன்தினம் நிறைவுபெற்றது. அங்கிருந்து லாரியில் ஏற்றப்பட்ட யானை லட்சுமி நேற்று காலை புதுச்சேரிக்கு வந்தது.

புதுவை கடற்கரை சாலையில் தலைமை செயலகம் அருகே யானை லாரியில் இருந்து கீழே இறக்கப்பட்டது. அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் யானைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் நேராக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. அங்கு விநாயகரை வலம் வந்து யானை தரிசனம் செய்தது. அதன்பின் யானை ஓய்வுக்காக வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அதன் ஓய்விடத்துக்கு அழைத்து செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்