சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு எழுத்து தேர்வு 137 பேர் எழுதினர்
புதுவையில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வில் 137 பேர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி,
புதுவை காவல்துறையில் 60 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.
இந்த பதவி உயர்வினைபெற உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் என 139 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான எழுத்து தேர்வு கோரிமேடு காவலர் சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது.
தேர்வினை 137 பேர் எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 2 பேர் தேர்வு எழுத வரவில்லை. விடைத்தாள்கள் விரைவில் திருத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான உடல் தகுதி தேர்வுகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.