புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

வீரபாண்டி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2020-02-01 22:26 GMT
வீரபாண்டி,

திருப்பூர் வீரபாண்டி பகுதிக்கு உட்பட்ட மூகாம்பிகை நகர் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற வீரபாண்டி போலீசார் கியாஸ் குடோன் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தனர்.

சோதனையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து வீரபாண்டி போலீசார் பெட்டிக்கடை நடத்தி வந்த திருப்பூர் பூம்புகார் நகரைச்சேர்ந்த பிரபு (வயது 35) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 20 புகையிலை பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்