எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு போராட்டம் நடத்த முடிவு
எல்.ஐ.சி. பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ளதற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
மத்திய பட்ஜெட்டில் ஆயுள் காப்பீட்டு நிறுவன (எல்.ஐ.சி.) பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா கூறும்போது, “இந்த அறிவிப்பை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த நடவடிக்கை மிகவும் சுலபமானதல்ல. நாடாளுமன்ற ஒப்புதலை பெறுவது உள்பட பல்வேறு நடைமுறைகள் உள்ளன. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 3 அல்லது 4-ந் தேதி ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்வோம். அதன்பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். பொது காப்பீட்டு நிறுவன ஊழியர்களும் அன்று தங்கள் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபடுவார்கள்” என்றார்.