சீனாவில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் இருக்கும் என அஞ்ச வேண்டாம் அமைச்சர் பேட்டி
சீனாவில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் இருக்கும் என்ற அச்சம் வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன் தலைமை தாங்கினார். விழாவில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவிகள் வில்லுப்பாட்டு பாடினர். மேலும் 6-ம் வகுப்பு மாணவி கீர்த்திகா தலையாட்டி பொம்மைபோல் வேடமணிந்து, கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசுகையில், மாணவர்கள் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 15 முறை சோப்பு போட்டு கை கழுவ வேண்டும் என்றார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அதிகாரி ராஜேந்திரன், முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ஜீவானந்தம், பள்ளி தலைமை ஆசிரியர் பெட்லாராணி, ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
வதந்திகளை நம்ப வேண்டாம்
பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தொடர்ந்து கொரோனா வைரஸ் குறித்து மக்களிடமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடம் சுகாதாரத்துறையும், தமிழக அரசும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் இருந்து இதுவரையில் 394 பேர் தமிழகம் வந்து உள்ளனர். தொடர்ந்து அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. சென்னை பெண்மணி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு என்று பரவிய தகவல் வதந்தியே, அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. சீனாவில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் இருக்கும் என்ற அச்சம் வேண்டாம். அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. மத்திய அரசு போதிய ஆலோசனைகளை வழங்கி வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தோடு தொடர்பில் இருக்கிறோம். அவர்களும் உரிய ஆலோசனைகளை வழங்கி வருகின்றார்கள். மக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.
தமிழகத்தை பொறுத்தவரையில் நுழைவாயில் கண்காணிப்பு நமக்கு சவாலான பணியாக உள்ளது. எனினும் சீனாவில் இருந்து வரும் அனைத்து நபர்களும் விமான நிலையத்தில் பலத்த மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோல கேரளாவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதால் தமிழக-கேரள எல்லை பகுதிகளிலும் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விலையில்லா சைக்கிள்கள்
இதேபோல புதுக்கோட்டையில் உள்ள திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி, சந்தைப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, திருஇருதய ஆண்டவர் மேல்நிலைப்பள்ளி, தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.