சென்னை விமான நிலைய ஆணையக புதிய இயக்குனராக சுனில் தத் பதவி ஏற்பு
சென்னை விமான நிலைய ஆணையக புதிய இயக்குனராக சுனில் தத் நியமிக்கப்பட்டார்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையக இயக்குனராக இருந்த ஸ்ரீகுமார், டெல்லி தலைமையிடத்து நிர்வாக அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை விமான நிலைய ஆணையக புதிய இயக்குனராக, சண்டிகார் விமான நிலைய தலைமை செயல் அதிகாரியாக இருந்த சுனில் தத் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து சுனில் தத், சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையக இயக்குனராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு விமான நிலைய ஆணையக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.