காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவில் கருடசேவை திருவிழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவில் கருடசேவை திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2020-02-01 23:00 GMT
காஞ்சீபுரம்,

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலின் பிரம்மோற்சவம் கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் சாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முக்கிய விழாவான கருடசேவை விழா நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கருடவாகனத்தில் பெருமாள் உற்சவர் மலர் கோலத்தில் எழுந்தருளினார்.

தேரோட்டம்

அப்போது அர்ச்சகர்கள் கற்பூர தீபாராதனை காட்டினர். அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். தேரோட்டம் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. 8-ந்தேதி சாற்றுமுறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் குமரன், மேலாளர் ரகு மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்