குப்பைகளுக்கு வைத்த தீ பரவியது லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

எண்ணூரில் குப்பையில் எரிந்த தீ காற்றின் வேகத்தில் கன்டெய்னர் லாரியிலும் பிடித்துக்கொண்டது.

Update: 2020-02-01 22:00 GMT
திருவொற்றியூர்,

எண்ணூர் ஆல் இந்தியா ரேடியோ நகர் பகுதியில் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. நேற்று அந்த குப்பைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதன் அருகே நீண்ட நாட்களாக ஒரு கன்டெய்னர் லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

குப்பையில் எரிந்த தீ காற்றின் வேகத்தில் மளமளவென பரவி, அருகில் நின்றிருந்த கன்டெய்னர் லாரியின் பின்பக்க சக்கரத்திலும் தீப்பிடித்துக்கொண்டது. மளமளவென லாரி முழுவதும் தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

இதுபற்றி அங்கிருந்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற எண்ணூர் போலீசார், மாநகராட்சி குடிநீர் லாரி மூலம் தண்ணீர் ஊற்றி லாரி மற்றும் குப்பையில் எரிந்த தீயை அணைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குப்பையில் தீ வைத்தது யார்? அல்லது சிகரெட்டை அணைக்காமல் நெருப்புடன் குப்பையில் யாராவது வீசி சென்றனரா? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்