தியாகி சின்னசாமியின் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க தினத்தை முன்னிட்டு மொழிப்போரில் ஈடுபட்டு உயிர் நீத்த தியாகி சின்னசாமியின் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2020-01-25 22:15 GMT
கீழப்பழுவூர், 

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் புதிய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள தியாகி சின்னசாமி சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமையில், அ.தி.மு.க.வினர் கீழப்பழுவூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக நடந்து வந்து தியாகி சின்னசாமியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர், திருமானூர் ஒன்றிய செயலாளர் குமரவேல், மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர், ஒன்றிய மாணவரணி செயலாளர் பாவேந்தன், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் பாலமுருகன், கீழப்பழுவூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி மருதமுத்து உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தி.மு.க. சார்பில் அரியலூர் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ் சிவசங்கர் தலைமையில், தி.மு.க.வினர் கீழப்பழுவூர் புதிய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள தியாகி சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் திருமானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கென்னடி, மேற்கு ஒன்றிய செயலாளர் அசோக் சக்ரவர்த்தி, மாவட்ட துணை செயலாளர் தனபால், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நெப்போலியன், முத்தமிழ்ச்செல்வன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முருகேசன் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பா.ம.க. சார்பில் அரியலூர் தொகுதி செயலாளர் தர்மபிரகாஷ் தலைமையில் கீழப்பழுவூர் புதிய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள தியாகி சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் ரவிசங்கர், ஒன்றிய செயலாளர் வினோத், ஒன்றிய தலைவர் சிவா, நகர செயலாளர் சின்னதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் ராமஜெயவேல் தலைமையிலான தே.மு.தி.க.வினர் தியாகி சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் மாவட்ட துணை செயலாளர் தங்க ஜெயபால், ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொதுகுழு உறுப்பினர் கலியமூர்த்தி, கீழக்கவட்டாங்குறிச்சி ஒன்றிய கவுன்சிலர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்