மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

மழையால் சேதம் அடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-01-24 22:15 GMT
வாய்மேடு, 

நாகை மாவட்டம் வாய்மேடு, தென்னடார், பஞ்சநதிக்குளம், ஆயக்காரன்புலம், தலைஞாயிறு, துளசாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு இருந்தன. இந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் மழை பெய்தது. இந்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன.

இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தற்போது இந்த பகுதிகளில் அறுவடை செய்வதற்கு போதிய எந்திரங்கள் இல்லை என்று தெரிகிறது. மேலும் அறுவடை எந்திரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அறுவடை பணிகள் காலதாமதமாகிறது.

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும். அறுவடை பணிக்கு எந்திரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்