மதுரையில் விபத்து: கார் மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி

மதுரையில் கார் மோதி மோட்டார்சைக்கிளில் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக பலியானார்.

Update: 2020-01-23 22:00 GMT
மதுரை,

மதுரை திருப்பரங்குன்றம், ஹார்விபட்டியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 57). மீனாட்சி அம்மன் கோவில் போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

பழங்காநத்தம் அருகே சென்ற போது எதிரே வந்த கார் கோபாலகிருஷ்ணன் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்