அரக்கோணம்-காட்பாடி இடையே கூடுதல் ரெயில்கள் விட வேண்டும் - பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்

அரக்கோணம்-காட்பாடி இடையே கூடுதல் ரெயில்கள் விட வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2020-01-23 22:15 GMT
அரக்கோணம், 

அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி, பொதுச்செயலாளர் ஜே.கே.ரகுநாதன் மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது:-

அரக்கோணம் அருகே வடமாம்பக்கம், மங்கம்மாபேட்டை பகுதியில் புதிதாக ரெயில் நிலையம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ரெயில்களும் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அரக்கோணம்-காட்பாடி, காட்பாடி-அரக்கோணம் இடையே கூடுதல் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், டிஜிட்டல் பலகைகள் மூலமாக ரெயில் வருகை புறப்பாடு குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

இதுதொடர்பான மனுவை அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆய்வு செய்ய வரும் தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமசிடம் வழங்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்