குடும்பத்தகராறு; விஷம் கலந்த உணவை சாப்பிட்டு டிரைவர் தற்கொலை

குடும்பத்தகராறு காரணமாக விஷம் கலந்த உணவை சாப்பிட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-01-23 22:45 GMT
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் அருகே உள்ள செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாசின் (வயது 33). இவர் சரக்கு ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும்போது தகராறு ஏற்படுவது வழக்கம்.

அதேபோல் சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டது.

இதனால் மனம் உடைந்த டிரைவர் பாசின் நேற்று முன்தினம் விஷம் கலந்த உணவை சாப்பிட்டார். இதில் மயங்கி கீழே விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித் தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த தற்கொலை குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்