தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தக்கோரி சிவனடியார்கள் யாகம்
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தக்கோரி சிவனடியார்கள் யாகம் நடத்தினர்.
தஞ்சாவூர்,
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் 23 ஆண்டுகளுக்குப்பிறகு வருகிற 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டும் என்று ஒருபிரிவினரும், ஏற்கனவே உள்ள ஆகம விதிமுறைப்படி(சமஸ்கிருதம்) நடத்த வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக அரசு ஆகம விதிமுறைப்படி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டும் என்று இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் சார்பில் சிவனடியார்கள் பங்கேற்ற யாகம் தஞ்சையில் நேற்று நடந்தது.
சிவனடியார்கள் யாகம்
தஞ்சை காவேரி திருமண மண்டப வளாகத்தில் கும்பாபிஷேகத்தை தமிழ் வழியில் நடத்திட அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பாக சிவனடியார்கள் இந்த யாகத்தை நடத்தினர். காலை 6.15 மணிக்கு சித்தர் நெறி கொடியேற்றத்துடன் யாகம் தொடங்கியது.
இந்த யாகம் இந்து வேதமறுமலர்ச்சி இயக்கத்தினரான அரசயோகி கருவூராரின் குருவழி வாரிசு மூங்கிலடியார் பொன்னுசாமி, வேங்கட்ரமணன், பூதகணநாதர், உருத்திரதேவர், நவலடியார், வான்மீகிநாதர், வெங்கடேசன், காசிவிசாலாட்சி மற்றும் சிவனடியார்கள் இந்த யாகத்தினை நடத்தினர்.
கலசம், ருத்ராட்ச மாலைகள்
இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு அருளேற்றப்பட்ட கலசங்களையும், ருத்ராட்ச மாலைகளையும், சக்கரங்களையும் இல்லத்தின் பாதுகாப்பிற்காக பெற்றுச்சென்றனர். மேலும் இதில் தேவமொழி, வேதமொழி, தெய்வமொழி, கடவுள்மொழி, யாகங்கள், பூஜைகள், இல்லத்திற்குரிய அன்றாட பூஜைகள், சடங்கு, சம்பிரதாயங்கள், விழாக்கள், எல்லா கோவிலுக்குரிய சாஸ்திரங்கள், தோஸ்திரங்கள், கோவில் ஒழுங்குகள் தொடர்பான விளக்கமும் அளிக்கப்பட்டது.
இது குறித்து மூங்கிலடியார் பொன்னுசாமி கூறுகையில், “64 முறை சிவபெருமான் திருவிளையாடல் செய்தது தமிழ் நாட்டில் தான். தமிழ் மொழியில் தான் அவர் பேசினார். தமிழ் மக்களுடன் தான் இந்த திருவிளையாடலை நடத்தினார். அவர் தான் வேதநாயகன். அவரால் அருளப்பட்டது தான் இந்து வேதம். இந்த கலிகாலத்தில் கடவுளை பார்க்க முடியும் என்று உலகத்துக்கு காட்டியவர்கள் 63 நாயன்மார்களும், 12 ஆழ்வார்களும், தொகையடியார்களும், வடலூர் வள்ளலார் பெருமானும் ஆவார். இவர்கள் அனைவரும் தமிழ்வழியில் தான் பூஜை செய்தார்கள். அவர்களுக்கு தமிழ் மொழி மட்டும் தான் தெரியும்.
தமிழில் கும்பாபிஷேகம்
தமிழில் மந்திரம் இருக்கிறதா? என்று கேட்கக்கூடாது. வடமொழியில் உள்ள ரிக்வேதத்தில் சிவன் என்ற வார்த்தையே கிடையாது. சிவனை பற்றி பேசாத ஒரு வேதம் இந்து வேதமாக இருக்க முடியுமா? அது தான் சமஸ்கிருத வேதம். பிரணவ மந்திரம்(ஓம்) தான் எல்லா மந்திரங்களுக்கும் அடிப்படை ஒலி. தமிழில் வேதங்கள் உள்ளன. எனவே தமிழ்வழியில் தான் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்” என்றார்.