தஞ்சை-திருவாரூர் மின்சார ரெயில் சேவை மார்ச் மாதத்திற்கு பிறகு தொடங்கும் திருச்சி கோட்ட மேலாளர் பேட்டி
தஞ்சை-திருவாரூர்் மின்சார ரெயில் சேவை மார்்ச் மாதத்திற்கு பிறகு தொடங்கும் என திருச்சி கோட்ட மேலாளர் அஜய்குமார்் கூறினார்.
திருவாரூர்,
திருவாரூர் ரெயில் நிலையத்தை திருச்சி கோட்ட மேலாளர்் அஜய்குமார் ஆய்வு செய்தார். அப்போது ரெயில் நிலைய அனைத்து நடைமேடைகளை நேரில் பார்வையிட்டு வசதிகள், தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அவருடன் ரெயில்வே கோட்ட முதுநிலை மேலாளர்் (இயக்கம்) பூபதிராஜா, கோட்ட வணிக மேலாளர் நரேன், நிலைய மேலாளர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் திருச்சி கோட்ட மேலாளர்் அஜய்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மின்சார ரெயில் சேவை
தஞ்சை-திருவாரூர்் மின்சார ரெயில் சேவை மார்்ச் மாதத்திற்கு பிறகு தொடங்க உள்ளது. ரெயில் நிலையத்தில் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். ஏ.டி.எம். சென்டர்கள் அமைக்க டெண்டர் கோரபட்டு, யாரும் விண்ணப்பிக்கவில்லை. வங்கிகள் முன் வந்தால் நிச்சயமாக அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும். 139 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் ரெயில் முன்பதிவு பயண விவரங்கள் குறித்து தகவல் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோரிக்கை மனு
முன்னதாக திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்போர் சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நிர்வாகிகள் கோட்ட மேலாளர்் அஜய்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-
திருவாரூரில் இருந்து அதிகாலையில் தஞ்சை, திருச்சி வழியாக மதுரைக்கும், மாலையில் 6 மணிக்கு பிறகு திருச்சியிலிருந்து திருவாரூருக்கும், சென்னையிலிருந்து திருவாரூர் வழியாக ராமேஸ்வரத்துக்கு ரெயில்கள் இயக்க வேண்டும். விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை வரை வரும் ரெயில்களை திருவாரூர்் வரை நீட்டிக்க வேண்டும். திருவாரூர் நடைமேடை 2, 3 உயரம் அதிகரிக்கவும், அனைத்து நடை மேடைகளிலும் கழிவறை வசதியும், கூரையுடன் கூடிய அதிக இருக்கை வசதிகள் செய்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்று கொண்ட கோட்ட மேலாளர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.