புதுச்சேரியில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது
புதுவையில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என்று அமைச்சர் கமலக் கண்ணன் கூறினார்.
புதுச்சேரி,
தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பினை கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
புதுவையிலும் தமிழக பாடத்திட்டமே பயன்படுத்தப்படுவதால் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? என்று கல்வி அமைச்சர் கமலக்கண்ணனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்து அமைச்சர் கமலக்கண்ணன் கூறியதாவது:-
பழைய நிலையே...
பொதுத்தேர்வு தொடர்பாக இதுவரை முடிவு எடுக்கவில்லை. ஆனால் புதுவையில் தேர்வுகளுக்கு ஒரு பள்ளி ஆசிரியரை மற்றொரு பள்ளியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி வருகிறோம். அதேபோல் விடைத்தாள்களையும் பிற பள்ளி ஆசிரியர்களே திருத்தி வருகின்றனர். எனவே இப்போதைக்கு பழைய நிலையே தொடரும்.
இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.
அமைச்சர் கமலக்கண்ணனின் கருத்தின் மூலம் இந்த ஆண்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது என்று தெரிகிறது.