பெலகாவியில் இருந்து பெங்களூரு வந்த கர்நாடக அரசு சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

பெலகாவியில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த கர்நாடக அரசு சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில் பஸ்சில் இருந்த 40 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2020-01-21 22:15 GMT
சிக்கமகளூரு,



இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கர்நாடக அரசு சொகுசு பஸ் தீப்பிடித்தது

வடகர்நாடக மாவட்டமான பெலகாவியில்இருந்து பெங்களூரு நோக்கிநேற்று முன்தினம்கர்நாடக அரசு சொகுசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 40 பயணிகள் பயணம் செய்தனர்.இந்தபஸ்,நேற்று அதிகாலை 4 மணி அளவில்சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா பித்தேபேதனஹள்ளி கிராமத்தின் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில்வந்து கொண்டிருந்தது.

பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பஸ்சின் முன்பகுதியில் இருந்து திடீரென்று கரும்புகை வெளியானது. மேலும் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர், உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். மேலும் அவர், பஸ்சில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளை எழுப்பி அவசர, அவசரமாக கீழே இறக்குமாறு எச்சரிக்கை விடுத்தார். பஸ்சில் தீப்பிடிப்பதை அறிந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினார்கள்.

எரிந்து நாசமானது

பயணிகள் அனைவரும் கீழே இறங்கிய பிறகு தீ, பஸ் முழுவதும் பரவி எரியத்தொடங்கியது. டிரைவர் மற்றும் அவருடைய உதவியாளர் பஸ்சில் பிடித்து எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ கொழுந்துவிட்டு மளமளவென எரிந்ததால் அவர்களால் அணைக்க முடியவில்லை. இதுகுறித்து உடனடியாக இரியூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பஸ்சில் பிடித்து எரிந்த தீயை தண்ணீைர பீய்ச்சி அடித்து போராடி அணைத்தனர். ஆனாலும் அதற்குள் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. பஸ் எலும்புக்கூடு போல காட்சி அளித்தது.

40 பயணிகள் உயிர் தப்பினர்

பஸ்சில் தீப்பிடித்து எரிவது பற்றி அறிந்ததும் டிரைவர், சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை சாலையோரம் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 40 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பெங்களூரு-புனே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஐமங்களா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் தீப்பிடித்து எரிந்து எலும்புக்கூடான பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதையடுத்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதுகுறித்து ஐமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்