குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் 72 பேர் கைது

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து காரைக்காலில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு கல்லூரி மாணவர்கள் 72 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2020-01-20 23:00 GMT
காரைக்கால்,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து காரைக்காலில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று புதிய பஸ் நிலையம் அருகே பாரதியார் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்கால் நகர போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் மாணவர்கள் மறியலை கைவிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

72 பேர் கைது

இதை தொடர்ந்து மாணவர்கள் 72 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை விடுவித்தனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்