ரெயிலில் பாய்ந்து புதுமாப்பிள்ளை தற்கொலை
அச்சன்புதூரில் ரெயிலில் பாய்ந்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
அச்சன்புதூர்,
தென்காசி- கடையநல்லூர் ரெயில்வே சாலையில் உள்ள மாவடிக்கால் ரெயில்வே கேட் அருகே நேற்று மாலை தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில் அவர் கடையநல்லூர் அருகே உள்ள புதுக்குடி வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் மாயா (வயது 22) என்பதும், ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
உடனே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மாயா ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.