தொடக்க பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை நினைவுபடுத்த மணி அடிக்க வேண்டும் மாநகராட்சி சுற்றறிக்கை
மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை நினைவுபடுத்தும் வகையில் தொடக்க பள்ளிகளில் மணி அடிக்க வேண்டும் என மும்பை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
மும்பை,
மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை நினைவுபடுத்தும் வகையில் தொடக்க பள்ளிகளில் மணி அடிக்க வேண்டும் என மும்பை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
வாட்டர் பெல் முறை
கேரள மாநிலத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை நினைவுபடுத்தும் வகையில் குறிப்பிட்ட இடைவெளியில் மணி அடிக்கும் முறை சில பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ‘வாட்டா் பெல்' முறை என அழைக்கப்படுகிறது.
இதுகுறித்த தகவல் சமூகவலைதளங்களில் பரவியது. வாட்டர் பெல் முறைக்கு கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
தொடக்க பள்ளிகளில் அறிமுகம்
இந்தநிலையில் வாட்டர் பெல் முறையை மும்பையில் உள்ள பள்ளிகளில் அறிமுகம் செய்ய வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் சிவசேனா கவுன்சிலர் சச்சின் பட்வால் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து மாநகராட்சி கல்வி துறை, மும்பையில் உள்ள அரசு மற்றும் தனியார் தொடக்க பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதன்படி இனிமேல் பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு குடிநீர் குடிப்பதை நினைவுபடுத்தும் வகையில் மணி அடிக்க வேண்டும். இந்த மணி 2-வது மற்றும் 6-வது பாடவேளை முடிந்த பிறகு அடிக்கப்படும். இந்த முறைக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.