பாபநாசம் அருகே ஓடும் காரில் தீப்பிடித்தது 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
பாபநாசம் அருகே ஓடும் காரில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காரில் இருந்தவர்கள் விரைவில் காரில் இருந்து கீழே இறங்கியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பாபநாசம்,
திருப்பூர் மாவட்டம் நல்லூர் அருகே உள்ள முத்தண்ணபாளையத்தை சேர்ந்தவர் பிரேம்குமார்(வயது35). இவர் தனது குடும்பத்தினர் 6 பேருடன் காரில் திருப்பூரிலிருந்து புறப்பட்டு தாராசுரத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு துக்கநிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார்.
நேற்று அதிகாலை 5.30 மணியளவில் இவர்கள் திருக்கருகாவூர் -கும்பகோணம் சாலையில் ஏரி கிராமத்தில் மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்த போது காரின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காரில் இருந்தவர்கள் தீயை கவனித்ததால் அவர்கள் உடனே காரில் இருந்து இறங்கினர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் தீ பரவியது.
உயிர் தப்பினர்
இது குறித்து தகவல் அறிந்த பாபநாசம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமடைந்து விட்டது. காரில் தீப்பிடித்த போது அதில் இருந்த அனைவரும் விரைவாக காரில் இருந்து வெளியேறி விட்டதால் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். தீயில் எரிந்து நாசமடைந்த காரை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடித்தனர்.
இது குறித்து பாபநாசம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.