இளைஞர் காங்கிரசில் இருந்து தனவேலு எம்.எல்.ஏ. மகன் இடைநீக்கம்
இளைஞர் காங்கிரசில் இருந்து தனவேலு எம்.எல்.ஏ. மகன் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
புதுச்சேரி,
இளைஞர் காங்கிரசில் இருந்து தனவேலு எம்.எல்.ஏ. மகன் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இடைநீக்கம்
புதுவை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான தனவேலு ஊழல் புகார் தெரிவித்தார். கவர்னர் கிரண்பெடியை சந்தித்தும் புகார் தெரிவித்தார். கட்சியில் இருந்து கொண்டே காங்கிரஸ் அரசை விமர்சித்த தனவேலு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினார்கள். இதையடுத்து கட்சியில் இருந்து தனவேலு இடைநீக்கம் செய்யப்பட்டார். தனவேலுவுக்கு அவரது செயல்பாடு குறித்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவரது விளக்கத்தை பொறுத்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்று மாநில காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் தெரிவித்தார்.
நடவடிக்கை
இந்தநிலையில் சமூக வலைதளங்களில் கட்சி, ஆட்சி குறித்து தனவேலு எம்.எல்.ஏ.வின் மகனும் இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான அசோக்ஷிண்டே தவறான கருத்துகளை பரப்புவதாக கட்சியில் புகார் தெரிவிக்கப்பட்டது. கவர்னரை சந்தித்த போது தனவேலு எம்.எல்.ஏ.வுடன் அசோக்ஷிண்டேவும் சென்று இருந்தார். இதையொட்டி அவரையும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆபிரகாம் நடவடிக்கை எடுத்துள்ளார்.