மின்கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் மந்திரி நிதின் ராவத் பேட்டி
மின்கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என மந்திரி நிதின் ராவத் கூறியுள்ளார்.
நாக்பூர்,
மின்கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என மந்திரி நிதின் ராவத் கூறியுள்ளார்.
மின் கட்டண உயர்வு
மராட்டிய மாநில மின் வினியோக நிறுவனமான மகாவிதாரன் வருகிற ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்பட உள்ள புதிய மின்கட்டண பட்டியலை மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கி உள்ளது. அப்போது மாநிலத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படலாம் என கருதப்படுகிறது.
இந்தநிலையில், மின்சாரத்துறை மந்திரி நிதின் ராவத் நாக்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
முயற்சி மேற்கொள்ளும்
புதிய மின் கட்டணம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். அதன் பின்னர் தான் மின்கட்டண உயர்வு தொடர்பாக முடிவு செய்யப்படும். சாமானிய மக்கள் மீது எந்தவிதமான சுமையும் ஏற்படாமல் இருக்க அரசாங்கம் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.