சந்திராப்பூர் உள்பட 3 மாவட்டங்களில் மதுவிலக்கு நன்மை, தீமை குறித்து ஆய்வு செய்யப்படும் மந்திரி விஜய் வட்டேடிவார் பேட்டி

மதுவிலக்கு அமலில் உள்ள சந்திராப்பூர் உள்பட 3 மாவட்டங்களில் அதனால் ஏற்பட்ட நன்மை, தீமைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என மந்திரி விஜய் வட்டேடிவார் கூறினார்.

Update: 2020-01-17 23:00 GMT
மும்பை, 

மதுவிலக்கு அமலில் உள்ள சந்திராப்பூர் உள்பட 3 மாவட்டங்களில் அதனால் ஏற்பட்ட நன்மை, தீமைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என மந்திரி விஜய் வட்டேடிவார் கூறினார்.

மந்திரி பேட்டி

மராட்டியத்தில் சந்திராப்பூர், வார்தா, கட்சிரோலி ஆகிய 3 மாவட்டங்களில் மதுவிலக்கு அமலில் உள் ளது. சந்திராப்பூர் மாவட்ட பொறுப்பு மந்திரியாக காங்கிரசை சேர்ந்த விஜய் வட்டேடிவார் நியமிக்கப்பட்டு உள்ளார். மந்திரியாக பதவி ஏற்றபின்னர் முதல்முறையாக நேற்றுமுன்தினம் அவர் சந்திராப்பூர் வந்தார்.

அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆய்வு செய்யப்படும்

விதர்பா பிராந்தியத்தில் உள்ள சந்திராப்பூர் மாவட்டத்தை மேம்படுத்துவதற்கான செயல்திட்டத்தை மாநில அரசு உருவாக்கும். இங்கு வருவாயை மேம்படுத்துவதற்காக திட்டம் வகுக்கப்படும். சந்திராப்பூர், வார்தா, கட்சிரோலி மாவட்டங்களில் அமலில் உள்ள மதுவிலக்கின் நன்மை, தீமைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.

அத்தகைய கோரிக்கை வைக்கப்படும் பட்சத்தில் மாநில அரசின் குழு மதுவிலக்கின் குறைபாடுகள் மற்றும் நன்மைகள் குறித்து ஆய்வு செய்யும்.

சந்திராப்பூருக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பீர் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்