தாராவியில் இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் ரத்து மாநகராட்சி அறிவிப்பு
தாராவியில் இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது.
மும்பை,
தாராவியில் இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது.
தாராவி மெயின் ரோடு
மும்பை தாராவி 60 அடி ரோடு, மெயின்ரோடு பகுதி வழியாக செல்லும் பிரதான குடிநீர் குழாயில் பழுது பார்க்கும் பணிகள் இன்று (சனிக்கிழமை) பகல் 12 மணிக்கு தொடங்கி நாளை பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது.
எனவே இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை தாராவி மெயின் ரோடு, கணபதி கோவில் ரோடு, ஏ.கே.ஜே. நகர் ரோடு, கும்பர்வாடா, சந்த்கோரா கும்பார் ரோடு மற்றும் திலிப் கதம் மார்க் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது.
மாட்டுங்கா லேபர் கேம்ப்
நாளை அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை தாராவி பிரேம் நகர், நாயக் நகர், 60 அடி ரோடு, ஜாஸ்மின் மில் ரோடு, மாட்டுங்கா லேபர் கேம்ப், 90 அடி சாலை, எம்.ஜி.ரோடு, தாராவி லுப் ரோடு, சந்த் ரோகிதாஸ் ரோடு ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது.
இதேபோல இன்று பகல் 12 மணி முதல் நாளை பகல் 12 மணி வரை பாந்திரா டெர்மினல் பகுதியிலும் குடிநீர் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மும்பை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.