இந்தி நடிகையை மானபங்கம் செய்த தொழில் அதிபருக்கு 3 ஆண்டு கடுங்காவல் கோர்ட்டு தீர்ப்பு
இந்தி நடிகையை மானபங்கம் செய்த தொழில் அதிபருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
மும்பை,
இந்தி நடிகையை மானபங்கம் செய்த தொழில் அதிபருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
விமானத்தில் நடிகை மானபங்கம்
இந்தி நடிகை ஒருவர், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் இருந்து மும்பைக்கு விஸ்தாரா விமானத்தில் வந் தார். அப்போது, அவருக்கு பின் இருக்கையில் அமர்ந்து இருந்த தொழில் அதிபர் விகாஸ் சச்தேவ்(வயது41), நடிகையை மானபங்கம் செய்தார்.
இது குறித்து நடிகை சமூகவலைதள பக்கத்தில் புகார் அளித்து இருந்தார். விமானத்தில் தொழில் அதிபர் பின்னால் இருந்து அவரது கால்களால் தனது கால், இடுப்பு, கழுத்து உள்ளிட்ட இடங்களில் தொட்டு மானபங்கம் செய்ததாக நடிகை கூறியிருந்தார். மேலும் நடிகை இது குறித்து போலீசிலும் புகார் அளித்தார்.
3 ஆண்டு கடுங்காவல்
இதையடுத்து போலீசார் சம்பவத்தின் போது 17 வயதாக இருந்த நடிகையை மானபங்கம் செய்த தொழில் அதிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில், நடிகையை மானபங்கம் செய்த தொழில் அதிபருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தொழில் அதிபர் மீது புகார் அளித்த நடிகை, நடிப்பு துறையில் இருந்து விலகிவிட்டதாக கடந்த ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.