திருக்கோவிலூர் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா

திருக்கோவிலூர் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

Update: 2020-01-16 22:30 GMT
திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் தி.மு.க. இளைஞரணி சார்பில் சமத்துவபொங்கல் விழா நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் எஸ்.அன்பு தலைமை தாங்கினார். விழாவில் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பொங்கலிட்டனர். பின்னர் அனைவருக்கும் பொங்கல் பகிர்ந்து வழங்கப்பட்டது. விழாவில் அரகண்டநல்லூர் நகர முக்கிய பிரமுகர்கள் செல்வம், காமராஜ், தினகரன், மொபின்கான், தனுசு, செந்தமிழ், சத்தியராஜ், விக்கி, இளையராஜா, ராஜ்மோகன், தொ.மு.ச. நிர்வாகி முருகன், பாண்டு, நிர்மல்ராஜ், அங்குவிக்னேஷ் மற்றும் பொதுமக்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இளைஞரணி நிர்வாகி அய்யப்பன் நன்றி கூறினார்.

சி.எஸ்.சி. கம்ப்யூட்டர்

இதேபோல் திருக்கோவிலூர் சி.எஸ்.சி. கம்ப்யூட்டர் நிறுவனத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதற்கு ஆடிட்டர் சாமிசுப்பிரமணியன் தலைமை தாங்கி பொங்கல் விழாவின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார். இதில் பொங்கலிட்டு அனைவருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது. விழாவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்