மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுவது இல்லை முதல்-மந்திரி எடியூரப்பா சொல்கிறார்
பொதுமக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுவதில்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
சிவமொக்கா,
பொதுமக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுவதில்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பொதுமக்களின் வரிப்பணம்
முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று முன்தினம் சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புராவுக்கு வந்தார். சிகாரிப்புராவில் தனது மகனும், எம்.பி.யுமான ராகவேந்திராவுடன் சேர்ந்து அவர் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் பல்வேறு தாலுகாக்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் அனைத்து மக்களையும் காப்பாற்றும் பொறுப்பில் இருக்கிறேன்.
சிகாரிப்புராவுக்காக கொடுக்கப்பட்ட வளர்ச்சி நிதி நல்ல முறையில் செலவு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுவதில்லை.
நீர்ப்பாசன திட்டம்
மாநிலத்திற்கான வரி வருவாய் மற்றும் பிற வருவாய்களைக் கொண்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக சிவமொக்கா மாவட்டத்தில் விமான நிலையம், நீர்ப்பாசன திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.