ராமநாதபுரம் கிராமத்தில் பூட்டிக் கிடந்த நூலகம் திறப்பு
கண்ணமங்கலம் அருகே படவேடு ராமநாதபுரம் கிராமத்தில் ஊர்புற நூலகம் சில ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டிக்கிடந்தது.
கண்ணமங்கலம்,
தற்போது ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றுள்ள ஆர்.சீனிவாசன், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கையை ஏற்று கடந்த 15–ந் தேதி சிறப்பு பூஜை செய்து நூலகத்தை திறந்து வைத்தார்.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம், பேனா வழங்கப்பட்டது. இந்த நூலகத்தில் சரித்திர, கதைகள் மற்றும் உள்பட புத்தகங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. தினசரி நாளிதழ்களும் வரவழைக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் அன்பழகன், துணைத்தலைவர் தாமரைச்செல்விஆனந்தன், ஒன்றிய கவுன்சிலர் தஞ்சியம்மாள்லோகநாதன், கிளைச் செயலாளர்கள் சங்கர், சம்பத், படவேடு கோவில் முன்னாள் அறங்காவலர் முத்துக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக படவேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.