காதல் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை

காதல் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2020-01-14 22:45 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் ராஜ் (வயது 28), தச்சு தொழிலாளி. இவர் ஒரு பெண்ணை காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். 

இந்த நிலையில் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் 5 மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். தற்போது அந்த பெண் தனது தாலிச்சங்கிலியை ராஜிடம் கழற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்