புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் தொழிற்சங்கத்தினர் மறியல்; கைது

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி புதுச்சேரி நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-01-09 00:14 GMT
புதுச்சேரி,

நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. ஆனால் புதுச்சேரியில் வேலைநிறுத்தத்துடன் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதில் ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., ஏ.ஐ.சி.சி.டி.யு., எல்.எல்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஐ.யு.டி.யு.சி. மற்றும் அரசு ஊழியர்கள் சம்மேளனம் உள்பட 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி புதிய பஸ் நிலையம் அருகே சி.ஐ.டி.யு. ராமச்சந்திரன், சீனுவாசன் ஆகியோர் தலைமையில் மத்திய அரசை கண்டித்து மறியல் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், ஏ.ஐ.டி.யு.சி. ரவி, ஐ.என்.டி.யு.சி. நரசிங்கன், எல்.பி.எப். மூர்த்தி, ஏ.ஐ.சி.சி.டி.யு. பாலசுப்பிரமணியன், எல்.எல்.எப். செந்தில், எம்.எல்.எப். வேதா வேணுகோபால், ஏ.ஐ.யு.டி.யு.சி. முத்து, சங்கரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், அரசு ஊழியர் சம்மேளனம் பாலமோகனன் பிரேமதாசன் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன், உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினா். ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்தனர். இதையடுத்து அங்கு மறியலில் ஈடுபட்ட 147 பெண்கள் உள்பட 343 பேரை போலீசார் கைது செய்தனர்.

காமராஜர் சதுக்கம் அருகே நடந்த மறியல் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், ஐ.என்.டி.யு.சி. ரவிச்சந்திரன், சி.ஐ.டி.யு. ராஜாங்கம், முருகன், எல்.பி.எப். அண்ணா அடைக்கலம், எல்.எல்.எப். செல்வநந்தன், எம்.எல்.எப். முகமது இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அங்கு 16 பெண்கள் உள்பட 114 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்திரா காந்தி சதுக்கம் அருகே ஐ.என்.டி.யு.சி. ஞானசேகரன், ஏ.ஐ.டி.யு.சி. முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், சந்திரசேகரன், சி.ஐ.டி.யு. ராமசாமி, மதிவாணன், எல்.பி.எப். சண்முகம், ஏ.ஐ.சி.சி.டி.யு. அலேன், எல்.எல்.எப். அமுதவன், எம்.எல்.எப். இளங்கோ, ஏ.ஐ.யு.டி.யு.சி. லெனின்துரை மற்றும் பலர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அங்கு 19 பெண்கள் உள்பட 137 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராஜீவ்காந்தி சதுக்கம் அருகே நடந்த மறியலில் எல்.பி.எப். வெற்றிவேல், ஏ.ஐ.டி.யு.சி. சுப்பையா, முருகன், ஐ.என்.டி.யு.சி. தமிழ்செல்வன், சி.ஐ.டி.யு. நடராஜன், கலியமூர்த்தி, ஏ.ஐ.சி.சி.டி.யு. ஆறுமுகம், எல்.எல்.எப். கார்முகில், எம்.எல்.எப். மாசிலாமணி, ஏ.ஐ.யு.டி.யு.சி. சீனு மற்றும் பலர் கலந்துகொண்டனர். இங்கு 10 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்