செங்குன்றம்-திருவள்ளூர் கூட்டு சாலை, லாரி மோதி பெண் பலி - கணவர் கண் எதிரே பரிதாபம்

செங்குன்றம்-திருவள்ளூர் கூட்டு சாலை அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

Update: 2020-01-08 23:45 GMT
செங்குன்றம்,

பொன்னேரியை அடுத்த மீஞ்சூர் ராமரெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் யுவராஜ்(வயது 28). இவர், மணலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி(24). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

செங்குன்றம்-திருவள்ளூர் கூட்டு சாலை அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெயலட்சுமி, அதே இடத்தில் கணவர் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார்.

லேசான காயங்களுடன் யுவராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கவுசல்யா வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்