பூண்டி ஏரி இணைப்பு கால்வாய் பகுதியில் சாய்வு தளம் அமைக்கும் பணிகள் தீவிரம்

பூண்டி ஏரி இணைப்பு கால்வாய் பகுதியில் சாய்வு தளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Update: 2020-01-08 22:00 GMT
ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு, சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு லிங்க் கால்வாய் எனப்படும் இணைப்பு கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இங்கு 2 மதகுகள் உள்ளன. இந்த மதகுகள் பழுதுபட்டு், புதிய மதகுகள் அமைக்க வேண்டும் என்றால் சாய்வாக உள்ள கரையில் இறங்க வேண்டி உள்ளது.

மேலும் ஆய்வுக்கு வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சாய்வாக உள்ள கரையில் இறங்க வேண்டி உள்ளது. இது போன்று ஆய்வு செய்யும் போது பல அதிகாரிகள் தடுமாறி கீழே விழும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதனை கருத்தில் கொண்டு இணைப்பு கால்வாய் பகுதியில் மதகுகளை ஒட்டி சாய்வு கான்கிரீட் தளம், படிகட்டுகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

அதன்பேரில் கான்கிரீட் சாய்வு தளம், படிகட்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் கரைகள் மீது வளர்ந்துள்ள முள் புதர்களை தொழிலாளர்கள் அகற்றி வருகின்றனர்.

மேலும் செய்திகள்