டேங்கர் லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: கட்டிட தொழிலாளி பரிதாப சாவு
கடையநல்லூர் அருகே டேங்கர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக பலியானார்.;
அச்சன்புதூர்,
தென்காசி மாவட்டம் செங்கோட்டை கே.சி.சாலை புலவன் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் இசக்கித்துரை(வயது19). கட்டிட தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று செங்கோட்டையில் இருந்து புளியங்குடிக்கு நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சொக்கம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, கொல்லத்திலிருந்து கோவில்பட்டி நோக்கி தேங்காய் எண்ணெய்
லோடுடன் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று மோட்டார் சைக்கிள் இசக்கித்துரையின் கட்டுப்பாட்டை இழந்து சிறிது தூரம் தாறுமாறாக ஓடி, டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.